Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காமெடி நடிகர் விவேக்கிற்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம்! உணர்ச்சிவசத்துடன் வெளியிட்ட பதிவு

தமிழ் சினிமாவில் ஒரு தனித்துவமான காமெடி நடிகர் விவேக். அவரின் காமெடி காட்சிகளை ரசிக்கும் கூட்டம் பெருமளவில் இருக்கிறது. சிரிப்புடன் சிந்தனையையும் தூண்டுவது அவரின் காமெடி ஸ்பெஷல்.

சினிமாவில் பல வருட காலமாக பல நடிகர்களுடன் நடித்து வரும் அவர் குழந்தைகள் கல்வி, பசுமை என சமூக கதை சார்ந்த படங்களில் நடித்து வருகிறார்.

கிரீன் கலாம் என்ற பெயரில் மரங்கன்றுகளை பல இடங்களில் நட்டுவரும் அவர் பல நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வருகிறார்.

இந்த கொரோனா காலம் பலருக்கும் பல இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர் மகான் வள்ளலாரின் புத்தகங்களை விரும்பி படித்துள்ளதாக பதிவிட்டுள்ளார்.