Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அப்பா பாக்யராஜ் ஸ்டைல் போலவே மாறிய மாஸ்டர் சாந்தனு! இந்த போட்டோவ பாத்தீங்களா..

2021 பொங்கல் பண்டிகைக்கு மாஸாக வெளியாகவுள்ள படம் மாஸ்டர். விஜய்யும் மாஸ் லுக்கில் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ளார். கடந்த தீபாவளியன்று வெளியான மாஸ்டட்ர் டீசர் 40 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்து அதிகம் லைக் செய்யப்பட்ட டீசர் என்ற சாதனை செய்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

இப்படத்தில் விஜய்யின் தீவிர ரசிகரும் நடிகருமான சாந்தனு பாக்யராஜ் கல்லூரி மாணவர் போல கழுத்தில் ஐடி கார்ட் அணிந்து குழுவாக வந்த காட்சியை டீசரில் பார்த்திருப்பீர்கள் தானே.

நீண்ட நாளாக ஒரு வெற்றியை சினிமாவில் பதிவு செய்ய போராடும் நடிகர் சாந்தனுவுக்கு இப்படம் ஒரு திருப்பு முனையாக அமையும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

அவர் பிரபல நடிகரும் இயக்குனருமான பாக்யராஜின் மகன் என்றாலும் கூட தனக்கான இடத்தை பிடிக்க தனித்துவத்துடன் செயலில் ஈடுபடும் சாந்தனு தற்போது அப்பா பாக்யராஜின் அந்த கால ஸ்டைலில் சட்டை, பெல் பாட்டம் பேண்ட் அணிந்து பாவ கதைகள் என்ற வெப் சீரிஸ் படத்தில் நடித்துள்ளார்.

என்ன ஒரு சின்ன குறை, கூலிங் கிளாஸ் அணிந்திருந்தால் இன்னும் ரியல் பாக்யராஜ் போல் இருந்திருப்பார் என்பது ரசிகர்களின் கருத்து...

இந்த வெப் சீரிஸில் நடிகர் காளிதாஸ் ஜெயராம், பிரகாஷ் ராஜ், சாய் பல்லவி, இயக்குனர் கௌதம் மேனன், அஞ்சலி என பலர் நடித்துள்ளனர். இந்த ஆந்தாலஜி கதையை கௌதம் மேனன், சுதா கோங்ரா, வெற்றி மாறன், விக்னேஷ் சிவர் என பலர் இயக்கியுள்ளனர்.

சாந்தனுவின் லுக் இதோ...