சன் டிவி சீரியலிலும் மாஸ் காட்டும் தளபதி விஜய், ரசிகர்களிடையே ட்ரெண்டாகும் வீடியோ இதோ..
தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர். இவரின் திரைப்படங்களுக்கு இந்தியளவில் வரவேற்பு கிடைத்து வருவதால், தொடர்ந்து வசூல் சாதனை புரிந்து வருகிறது.
மேலும் தற்போது இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்த வருடம் திரைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே இவரின் அடுத்த திரைப்படம் குறித்த கேள்வி தற்போதே பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. ஆனால் மாஸ்டர் திரைப்படம் வெளியான பின்னரே தளபதி 65 குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வரும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் தளபதி விஜய்யின் திரைப்பட காட்சிகள் அல்லது புகைப்படங்கள் உள்ளிட்டவைகளை பயன்படுத்துவத்தை தற்போது பலரும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
அந்த வகையில் இப்பொது சன் டிவி-ல் ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியலின் ப்ரோமோவில் மாஸ்டர் படத்தின் போஸ்ட்டரை காண்பித்து மாஸ் காட்டியுள்ளனர்.
மேலும் அந்த வீடியோ விஜய்யின் ரசிகர்களிடையே பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ..
எங்கும் தளபதி எதிலும் தளபதி !#MASTER @actorvijay pic.twitter.com/NdBdvn26TE
— Kwood Trolls™ (@KwoodTroll) December 2, 2020