தமிழ் திரையுலகில் இருந்து அழிக்கமுடியாத சிறந்த கலைஞர்களில் ஒருவர் காமெடி நடிகர் வடிவேலு. இவர் தமிழ் சினிமாவிற்கு 'என் ராசாவின் மனசிலே' எனும் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
இதன்பின் சிங்கார வேலன், தேவர் மகன், பொண்ணுமணி, ராஜகுமாரன் போன்ற 100 கணக்கான திரைப்படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை ரசிகர்கள் மனதில் பெற்றார்.
மேலும் காமெடி நடிகராக மட்டுமில்லாமல், கதாநாயகனாவும் 23ஆம் புலிகேசி, தெனாலி ராமன், எலி ஆகிய படங்களில் நடித்து நம்மை மகிழ்வித்தார்.
திரையில் நடிக்கவில்லை என்றாலும், மீம் கிரியேட்டர்கள் மூலம் ஒவ்வொரு நாளும் நம்மை மகிழ்வெய்து கொண்டுடிருக்கிறார் வடிவேலு.
நடிகர் வடிவேலுவின் மகனை பார்த்திருக்கிறோம், ஆனால் வடிவேலுவின் மனைவி விசாலாக்ஷியை நாம் பார்த்ததில்லை. இந்நிலையில் முதன் முறையாக வடிவேலுவும் அவரின் மனைவியும் ஒன்றாக அவரின் மகள் திருமணத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.