Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

25 வருட சாபம்! வெளியே தெரியாமல் நடைபெறும் தவறு! ரஜினிக்கு உறுதியாக கூறும் முக்கிய புள்ளி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தி அடுத்த நகர்வு என அவரின் தீவிர விசுவாசிகளும், மாற்று அரசியலை விரும்புபவர்களும் காத்திருக்கிறார்கள்.

ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற குழப்பத்திற்கு நடுவில் ரஜினி தான் கட்சியை ஜனவரியில் தொடங்கப்போவதாக திட்டவட்டமாக அறிவித்தது அவரை நம்பி கட்சி பணியில் ஈடுப்பட்ட வந்த ரசிகர்களுக்கு மன உறுதி கிடைத்துள்ளது.

ஏற்கனவே தனக்கு பதவி ஆசை இல்லை. முதலமைச்சராக வேறொருவரை தான் நியமிப்பேன் என கூறியது பல விவாதங்களை ஏற்படுத்தியது.

இதன் பின்னர் துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியர் குருமூர்த்தி ரஜினியை சந்தித்து பேசினார். ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்பது என் விருப்பம், ஆனால் முடிவு அவரின் கையில் என கூறியிருந்தார்.

இந்நிலையில் அவர் ரஜினியை சினிமா நடிகராக யாரும் பார்க்கவில்லை; நல்லவர் என்று பார்க்கிறார்கள். ரஜினியும் மோடியும் இணைந்தால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உருவாகும் என்பது என் நிலைப்பாடு. இது ரஜினி நிலைப்பாடு என எனக்கு தெரியாது.

ரஜினியின் அறிவிப்பை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறேன். 25 வருடங்களாக தமிழ் நாட்டில் ஒரு சாபம் உள்ளது. இரண்டு பெரும் தலைவர்கள் இருந்தததால் அவர்கள் கட்சி செய்யும் தவறு தெரியாமல் போனது. ரஜினி முதலமைச்சராக தன்னை முன்னிறுத்திக் கொள்ளவேண்டும். என்ன செய்யப்போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம் என குருமூர்த்தி கூறியுள்ளார்.