ரஜினி கமலுக்கு அடி! விஜய்க்கு மறைமுகமாக எச்சரிக்கை? ஆவேசமாக பேசிய நபர்! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியல் நிலைப்பாடு பல வருடங்களாக பேசப்பட்டு வந்த ஒன்று. சந்தேகங்கள், குழப்பங்களுக்கிடையில் ஒரு வழியாக அவர் அரசியலுக்கு வரப்போவதையும், கட்சி தொடங்கப்போவதையும் அறிவித்துவிட்டார். மக்கள் சேவை கட்சி என தேர்தல் ஆணயத்தில் பதிவும் செய்துவிட்டார். எம்.ஜி.ஆரின் பிறந்த நாளில் கட்சியையும் தொடங்கவுள்ளதாக அறிவித்துவிட்டார்.
ஆனால் கமல் ஹாசன் ரஜினிக்கு முன்பாகவே கட்சி தொடங்கி, மாநாடு நடத்தில் நாடாளுமன்ற தேர்தல் களத்தையும் சந்தித்துவிட்டார். சட்ட மன்ற தேர்தலுக்கு முழு வீச்சில் தன் பணிகளை தொடங்கி சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அரசியல் பிரமுகரான சீமான் ரஜினியை பற்றி தொடர்ந்து விமர்சித்து தரக்குறைவாக பேசி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்நிலையில் சீமான் தேர்தலில் ரஜினி கமலுக்கு கிடைக்கும் அடி இந்த எந்த நடிகர்களும் அரசியலுக்கு வர பயப்பட வேண்டும் என கூறியுள்ளார்.
விஜய் தற்போது வேண்டுமானால் அரசியலுக்கு வரவில்லை என்றாலும் எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவார் என்ற நம்பிக்கையில் இருக்கும் ரசிகர்கள் மத்தியில் சீமானின் பேச்சு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது ஒருபக்கம் இருக்க நெட்டிசன்கள் சீமானும் திரைத்துறையிலிருந்து வந்தவர் தானே என கூறி இதுவரை தேர்தலில் அவர் பெற்ற ஓட்டுக்களை கொண்டு விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.
மாயாண்டி குடும்பத்தார், படத்துல வந்த நடிகர் ஒவ்வொரு தேர்தலிலும் செம்ம அடி வாங்குறார்.....ஆனாலும் ரஜினியும், கமலும் வர்றாங்க,அடுத்து விஜய்,வருவாரு....😀
— S.Viyom (@Viom57045512) December 23, 2020