Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஈஸ்வரன் படத்திற்கு வந்த சிக்கல்! சிம்புவுக்கு வந்த பிரச்சனை! மறுபடிமா?

சிம்பு அண்மையில் பலருக்கும் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார். அவர் மீது பல விமர்சனங்கள் சொல்லப்பட்டு வந்ததை அனைவரும் நன்கு அறிவார்கள். கொரோனா ஊரடங்கு காலத்தில் சினிமாவும் படப்பிடிப்புகள் இல்லாமல் ஸ்தம்பித்தது.

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வந்த ஈஸ்வரன் தீபாவளி ஸ்பெஷலாக ஜனவரி 14 ல் வெளியாகவுள்ளது. அண்மையில் இப்படத்தில் சிம்பு போஸ்டரும் சிம்புவின் தோற்றமும் அனைவரையும் கவர்ந்தது.

அதே வேளையில் சிம்பு பாம்பை பிடிப்பது போல வந்த வீடியோ சர்ச்சையாக பின்னர் அது கிராஃபிக்ஸ் என உறுதியானது. இந்நிலையில் சிம்பு நடித்து தோல்வியை சந்தித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் பிரச்சனை மறுபடியும் தலைதூக்கியுள்ளது.

சிம்புவின் அப்பா டி ஆர் அண்மையில் அளித்த பேட்டியில் AAA படத்தின் பிரச்சனையை காரணம் காட்டி ஈஸ்வரன் படத்தின் வெளியீட்டை தடுப்பது நியாயம் இல்லை. அப்பிரச்சனைக்கு சிம்பு நீதிமன்றத்தை நாடியுள்ளார். வழக்கு நிலுவையில் உள்ளது. சொன்ன தேதியில் ஈஸ்வரன் வெளியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.