கடந்த தீபாவளிக்கு வெளியாக வேண்டிய மாஸ்டர் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரு வழியாக இன்று வெளியாகிவிட்டது. விஜய் ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் இப்படத்தில் நடித்த அர்ஜூன் தாஸ், சாந்தனு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் நேரில் சென்று ரசிகர்களுடன் கூட்டத்தில் அமர்ந்து படம் பார்த்து மகிழ்ந்தனர்.
நல்ல வரவேற்பும், வசூலும் கிடைத்து வருகிறது. ரசிகர்களுக்கான சிறப்புக்காட்சியை தொடர்ந்து ஆன்லைனில் புக் செய்தவர்களுக்கான காட்சி நடைபெற்றது.
மதுரையில் காமெடி நடிகர் சூரி மாஸ்டர் படத்தை பார்த்துவிட்டு செய்தியாளர்களிடத்தில் பேசிய அவர் படம் மாஸாக உள்ளதாக கூறியுள்ளார்.