Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

100 ஸ்மார்ட் போன்களை இலவசமாக வழங்கிய பிரபல நடிகர்! தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் மக்கள்!

சினிமா நடிகர்கள், நடிகைகள் பலரும் பொது மக்களுக்கு உதவுவது அவ்வப்போது நிகழும் ஒன்று தான். ஆனால் தொடர்ந்து சேவை செய்பவர்கள் வெகு சிலரே. விரல் விட்டு எண்ணிவிடலாம்.

ஹிந்தி சினிமாவில் நடிகர் சோனு சூர் அண்மைகாலமாக மக்களால் அதிகம் கொண்டாடப்பட்டு வருகிறார். இன்னும் சொல்லப்போனால் அவரை மக்கள் ரியல் ஹீரோவாக பார்க்கின்றனர்.

கொரோனா காலத்தில் புலம் பெயர் தொழிலாளர்களை பத்திரமாக மீட்டு வந்ததோடு, அவர்களுக்கு தேவையான வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுத்தார். மேலும் வெளிநாட்டில் சிக்கி தவித்த மாணவர்களை விமானத்தில் அழைத்து வந்தார்.

இந்நிலையில் மகாராஷ்டிராவில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புக்காக 100 பேருக்கு ஸ்மார்ட்போன்களை இலவசமாக வழங்கியுள்ளாராம்.

ஏற்கனவே அவர் இது ஹரியானா கிராம மக்களுக்கு 100 ஸ்மார்ட் போன்களை வாங்கி கொடுத்துள்ளாராம்.