Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

5000 கிலோ மீட்டர் பைக் ரைட் செல்லவுள்ள தல அஜித், ஆச்சர்யத்தில் ரசிகர்கள்..! வெளியான மாஸ் தகவல்..

தல அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வந்தார், இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவுள்ளது.

மேலும் இப்படத்தின் அப்டேட் எதுவும் வெளியாகாத நிலையில், ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் தல அஜித் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது, ஆம் தல அஜித் தனது பைக்கில் புனேவில் இருந்து சிக்கிமிற்கு சுமார் 2500 கி.மீ ரைட் சென்றுள்ளார்.

இதனிடையே வாரணாசியில் ஒரு கடையில் ரசிகர் ஒருவருடன் தல அஜித் எடுத்து கொண்ட புகைப்படம் வைரலானது, பின் காசி விஸ்வநாத் கோவிலில் தரிசனம் செய்யவுள்ளாராம்.

அதனை தொடர்ந்து அவர் சிக்கிமில் இருந்து சென்னைக்கு வர சுமார் 2500 கி.மீ பைக்கில் பயணம் செய்யவுள்ளாராம். இதை வைத்து பார்க்கும் போது மொத்தமாக 5000 கி.மீ பைக் ரைட் போகவுள்ளார் தல அஜித்.