ஏழை வியாபாரி குழந்தைகளின் படிப்பிற்கு உதவிய தல அஜித்..! எவ்வளவு பணத்தொகை அளித்துள்ளார் தெரியுமா?
தல அஜித் தமிழ் சினிமாவின் மிக பெரிய நட்சத்திரமாக விளங்குபவர், கடைசியாக இவர் நடிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியானது.
அதனை தொடர்ந்து இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வந்தார், மேலும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மீண்டும் துவங்கவுள்ளது.
இந்நிலையில் தல அஜித் சிக்கிம் மாநிலத்திற்கு பைக் ரைட் சென்றுள்ளார், அப்போது வாரணாசியில் ரசிகர் ஒருவருடன் தல அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது.
மேலும் தற்போது தல அஜித் வலிமை படத்தின் ஷூட்டிங்கின் போது, ஹைதெராபாத்தில் உள்ள இட்லி கடை வியாபாரி ஒருவரின் குழந்தைகளின் படிப்பிற்கு உதவியுள்ளார்.
ஆம் அந்த குழந்தைகளின் படப்பிடிப்பிற்காக ரூ. 1 லட்சம் கொடுத்து உதவியுள்ளாராம் தல அஜித், இந்த தகவல் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே பரவி வருகிறது.