தளபதி விஜய்யுடன் இணைவது குறித்து முதல்முறையாக பதிவிட்ட கவுதம் மேனன், என்ன கூறியுள்ளார் பாருங்க..!
தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குகிறார், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வசூல் சாதனை படைத்தது வருகிறது.
அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் கடந்த 13 ஆம் தேதி வெளியானது.
மேலும் 50% இருக்கைகளுடன் வெளியான மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று தற்போது 200 கோடி வசூலை நெருங்கி வருகிறது.
இந்நிலையில் கடந்த 2012 ஆம் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகர் விஜய் யோகன் அத்தியாயம் ஒன்று திரைப்படத்தில் நடிப்பதாக இருந்தது.
ஆனால் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் உடன் இப்படம் கைவிடப்பட்டது, மேலும் இப்படம் ஆரம்பிக்கும் முன் இயக்குனர் கவுதம் மேனன் பதிவிட ட்வீட் ரசிகர்களிடையே பரவி வருகிறது.
ஆம் அதில் கவுதம் மேனன் "யோகன் வரும் ஜூலை மாதம் முதல் ஆரம்பமாகவுள்ளது, என்னால் காத்திருக்க முடியவில்லை. இனி முழுக்க ஆக்ஷன் தான்" என கூறியுள்ளார்.
Yohan-will start filming in July. Can't wait myself. It's action all the way..
— Gauthamvasudevmenon (@menongautham) June 10, 2012