Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மரண வேதனையில் கண்கலங்கிய நடிகர் வடிவேலு.. படவாய்ப்புகள் இல்லாததால் ஏற்பட்ட சோதனை

படங்களில் தற்போது நடிக்கவில்லை என்றாலும், ஒவ்வொரு நாளும் மீம் கிரியேட்டர்கள் மூலம் நம்மை சிரிக்க வைத்து கொண்டு இருக்கிறார் நகைச்சுவை நடிகை வடிவேலு.

ஆம் கடந்த 10 ஆண்டுகளாக, எப்போதும் தொடர்ந்து எந்த ஒரு படங்களிலும் நடிக்கவில்லை. ஆனால் மெர்சல், கத்திச்சண்டை உள்ளிட்ட சில திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் நண்பன்டா வாட்ஸ்அப் குழு நடத்திய நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசியுள்ளார்.

இதில் " நீங்க எல்லாரும் ஒரு வருடம் தான் லாக் டவுன்ல இருந்தீங்க. ஆனா நான் மட்டும் தான் பத்து வருஷமா லாக் டவுன்ல இருக்கிறேன். அதுமட்டுமில்ல வீட்டிலேயே முடங்கி கிடப்பது எனக்கு மரண வேதனையை கொடுக்கிறது " என்று கண்கலங்கினார்.

மேலும் இவர் மீண்டும் சூர்யாவின் நடிப்பில் உருவாகும் திரைப்படத்தில் வடிவேலு நடிக்க போகிறார் என்றும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது.