Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் 65 படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்! பல வருடங்களுக்கு பின் மீண்டும் இணையும் கூட்டணி! சூப்பர் ஹிட் ஸ்பெஷல்!

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய்யின் அடுத்த படமான விஜய் 65 குறித்து சன்பிக்சர்ஸ் நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இணையதளத்தில் வெளியிட்டது.

இப்படத்தை தாங்கள் தயாரிப்பதாகவும், நெல்சன் திலிப்குமார் இப்படத்தை இயக்குவதாகவும் கூறியிருந்தது. சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை இயக்கியுள்ள நெல்சனுக்கு இது பெரிய வாய்ப்பு எனலாம்.

ஹீரோயின், இசையமைப்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வரும் வேளையில் ஒளிப்பதிவாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மனோஜ் பரமஹம்சு தான் அந்த ஒளிப்பதிவாளராம்.

ஈரம் படத்தின் மூலம் அறிமுகமான இவர் விண்ணைத்தாண்டி வருவாயா, நடுநிசி நாய்கள், Race Gurram, Kick2, and Bruce Lee ஆகிய படங்களிலும் பணியாற்றியுள்ளாராம்.

அவர் இதற்கு ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த நண்பன் படத்திலும் பணியாற்றியுள்ளாராம்.