Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ப்ரேமம் படத்தில் நடித்த இந்த மூன்று ஹீரோயின்களுக்குமே ஒரு ஒற்றுமை உள்ளது, என்ன தெரியுமா?

ப்ரேமம் என்ற ஒரே படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களை கவர்ந்தவர்கள் சாய் பல்லவி, அனுபாமா, மடோனா. ஆனால், இவர்களை மலர், மேரி, செலின் என்று சொன்னால் தான் பலருக்கும் தெரியும்.

அந்த வகையில் இந்த மூன்று ஹீரோயின்களுமே தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிஸியாக நடித்து வருகின்றனர், இதில் இவர்கள் நடித்த படங்கள் இதுவரை ஒரு கூட தோல்வியடைந்ததே இல்லை.

அனுபாமா ப்ரேமத்தை தொடர்ந்து A Aa(தெலுங்கு), கொடி(தமிழ்), Shatamanam Bhavati(தெலுங்கு), Jomonte Suvisheshangal(மலையாளம்), தெலுங்கு ப்ரேமம் ஆகிய படங்கள் நடித்துள்ளார், இந்த படங்கள் அனைத்துமே ஹிட் வரிசையில் இடம்பிடித்துள்ளது.

அதேபோல் சாய் பல்லவி ப்ரேமத்திற்கு பிறகு Kali(மலையாளம்), Fidaa(தெலுங்கு) என இரண்டு படங்கள் நடித்து அதுவும் ஹிட் வரிசை தான்.

மடோனா ப்ரேமத்தை தொடர்ந்து காதலும் கடந்து போகும், தெலுங்கு ப்ரேமம், தமிழில் கவண், பா பாண்டி ஆகிய படங்களில் நடித்தார், இந்த அனைத்து படங்களுமே ஹிட் தான். மலையாளத்தில் இவர் நடித்த கிங் லயர் படம் கூட செம்ம ஹிட் அடித்தது.

இந்த மூன்று நடிகைகளும் இதுவரை எந்த ஒரு பெரும் தோல்வி படங்களிலும் நடித்தது இல்லை, ஓரளவிற்கு மக்கள் மனதில் பதியும் படங்களிலே நடித்து அசத்தி வருகின்றனர், இவர்கள் வெற்றி இதே போல் தொடர வாழ்த்துக்கள்.