Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

போலி முகவரி கொடுத்து கார் வாங்கிய நடிகை அமலாபால்- கிடைக்கப்போகும் தண்டனை

சினிமா பிரபலங்கள் நல்லது, கெட்டது எது செய்தாலும் வெளியே தெரிந்துவிடும். அண்மையில் தான் நடிகை அமலாபால் தனது பிறந்தநாள் அன்று எர்ணாகுளத்தில் உள்ள 30 குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்றிருக்கிறார் என்ற செய்தி வந்தது.

இந்த நிலையில் அமலாபால் போலி முகவரி கொடுத்து கார் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ரூ. 1.12 கோடிக்கு எஸ் கிளாஸ் பென்ஸ் கார் வாங்கியிருக்கிறார்.

போலி முகவரி மூலம் புதுச்சேரியில் கார் பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரள வாகன சட்டப்படி அம்மாநிலத்திலும் அமலாபால் முறைப்படி வரி செலுத்தவில்லை. இந்நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அமலாபாலுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவின்றன.