Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தாமரை சீரியல் நடிகைக்கு ஆசிட் மிரட்டல்

தாமரை உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ள நடிகை ஆனந்தி. கந்துவட்டி கொடுமையில் சிக்கியுள்ளதாகவும், தனக்கு ஆசிட் வீசிவிடுவதாக மிரட்டல் வந்துள்ளதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.

இவர் உறவினரிடம் வாங்கிய ரூ.5 லட்சம் கடனுக்கு 1.80 லட்சம் ரூபாய் வட்டி செலுத்திவிட்டாராம். ஆனால் இவர் கொடுத்த காலி வங்கி காசோலையை பயன்படுத்தி அவருக்கு கடன் கொடுத்தவர்கள் வீட்டை எழுதி கேட்டு மிரட்டுகிறார்களாம்.

இந்த பிரச்சனையில் அவரது சகோதரரையும் கொலை செய்துவிட்டு, விபத்து என நாடகமாடிவருகின்றனர். மரணத்தில் சந்தேகம் உள்ளது என புகார் அளித்தும் போலீஸ் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

மேலும் ஆனந்தியை கொலை செய்துவிடுவோம், ஆசிட் அடித்துவிடுவோம் என அவரை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர்.

இது பற்றி ஆனந்தி சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவிற்கும் புகார் மனு அனுப்பியுள்ளார்.