குடும்பத்தாரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட பெண்- பிரச்சனையில் சிக்கிய நடிகை புவனேஸ்வரி
இலங்கையை சேர்ந்த சந்திரன் என்பவர் நடிகை புவனேஸ்வரி மீது ஒரு புகார் அளித்திருந்தார். அதில் தன்னுடைய 23 வயது பெண்ணை நடிகை கடத்தி வைத்திருப்பதாக கூறியிருந்தார். இந்த வழக்கு விசாரணை நேற்று (அக்டோபர் 31) விசாரணைக்கு வந்தது.
நீதிமன்றத்தில் ஆஜரான புவனேஸ்வரி பேசும்போது, தேவையில்லாமல் இந்த வழக்கு என் மீது போடப்பட்டுள்ளது. அப்பெண் அவரது குடும்ப நபர் ஒருவரால் பாலியல் துன்புறுத்துதலுக்கு ஆளாகியிருக்கிறார், அதை என்னிடம் கூறினார். முதலில் நான் அவரது பிரச்சனையில் தலையிடவில்லை.
பின் கடந்த மாதம் அப்பெண்ணை குடும்பத்தார் பாலியல் உறவுக்காக கொடுமைப்படுத்தியுள்ளனர். அங்கிருந்து அவள் தப்பித்து திருச்சியில் இருந்து என்னை பார்க்க வந்தார். அவள் என்னிடம் உதவி கேட்டதால் ஒரு பெண்ணாக, ஒரு தாயாக அவளை பாதுகாத்தேன்.
இதுகுறித்து முதலமைச்சருக்கும், போலீஸ் கமிஷ்னருக்கும் ஒரு கடிதம் எழுதினேன் அந்த பெண் என்னுடன் இருக்கிறார் என்று. அவரது குடும்பத்தினருக்கும் அவர்களது மகள் என்னுடன் இருக்கிறாள் என்று கூறினேன். அவர்கள் உடனே என் வீட்டிற்கு வந்து பெண்ணை அழைத்தார்கள், ஆனால் அவள் போக மறுத்தாள். ஒருவேளை நான் அங்கு சென்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறினாள். இதுதான் பிரச்சனை வேறு எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்.