நயன்தாரா சோலோ ஹீரோயினாக ஒவ்வொரு படத்திலும் மிரட்டி வருகின்றார். அதிலும் சமீபத்தில் வந்த அறம் இவரை வேறு உயரத்திற்கு கொண்டு சென்றுவிட்டது.
இவர் முதன்முறையாக நேற்று சென்னை திரையரங்குகளுக்கு விசிட் அடித்தார், அப்போது இவரை பார்க்க மக்கள் கூட்டம் கூடியது மட்டுமில்லாமல், எல்லோரும் தலைவி...தலைவி என்று கூச்சலிட்டனர்.
இதனால், நயன்தாரா சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் ஒரு ட்ரீப் அடிக்கலாம் என்று யோசித்து வருகின்றாராம், எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு வரலாம் ரசிகர்கள் ரெடியாக இருங்கள்.