நடிகர் சிம்புவை பற்றிய சர்ச்சைகளுக்கு பஞ்சமே இல்லை. கடந்த சில மாதங்களாக எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது AAA படத்தால் சிம்புவிற்கு ரெட் போடும் அளவிற்கு பிரச்சனைகள் வெடித்துள்ளது.
இதுகுறித்து தயாரிப்பாளரும், சிம்புவும் அவரவர் பக்கத்தில் உள்ள நியாயத்தையும் கூறி வருகின்றனர்.
தற்போது என்ன விஷயம் என்றால் சிம்புவுடன் ஒஸ்தி படத்தில் இடம்பெற்ற கலாசலா கலாசலா என்ற பாடலில் நடனம் ஆடிய பிரபல பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராத் ஒரு டுவிட் செய்துள்ளார்.
அதில் அப்பாடல் படப்பிடிப்பு மிகவும் ஜாலியாக இருந்ததாகவும் சிம்புவுடன் நடனம் ஆடிய நன்றாக இருந்தது என டுவிட் செய்துள்ளார்.
Had so much fun dancing with Simbu on the ultra peppy song Kalasala Kalasala #osthe #simbu #tamilcinema pic.twitter.com/Dp6LFVclWB
— Mallika Sherawat (@mallikasherawat) December 3, 2017