சாட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மஹிமா. இதை தொடர்ந்து இவருக்கு குற்றம்-23 நல்ல திருப்பத்தை கொடுத்தது.
அப்படத்தை தொடர்ந்து இவர் பல படங்களில் கமிட் ஆனார், சமீபத்தில் கூட இவர் நடிப்பில் கொடிவீரன் திரையரங்கில் வெற்றி நடைப்போடுகின்றது.
இந்நிலையில் மஹிமா சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘சினிமாவில் எந்த சந்தேகம் என்றாலும் அறிவழகன், சமுத்திரக்கனி சாரிடம் தான் முதலில் கேட்பேன்.
அவரிடம் கேட்காமல் நான் எந்த முடிவையும் எடுக்க மாட்டேன்’ என்று கூறியுள்ளார், மஹிமா தற்போது ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகின்றார்.