Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அமலா பாலை சந்தித்தது ஏன், பாலியல் தொல்லை கொடுத்தவர் வாக்குமூலம், யார் சொல்வது உண்மை?

சமூக வலைத்தளம் மட்டுமின்றி தமிழ் திரையுலகத்தையே நேற்று அதிர்ச்சியாக்கிய செய்தி அமலா பாலிற்கு வந்த பாலியல் தொல்லை குறித்து தான். அழகேசன் என்பவர் தன்னை வெளிநாட்டிற்கு அழைத்ததாக அமலா பால் போலிஸிடம் புகார் கொடுத்தார்.

இந்நிலையில் அழகேசன் வாக்குமூலத்தில் மலேசியாவில் உள்ள தொழிலதிபர் ஒருவரின் பார்ட்டிக்கு அமலா பால் வருவதாக சொன்னார், அது விஷயமாக அவரின் மேனேஜரிடம் பேசினேன்.

அவரும் உடற்பயிற்சி செய்ய சென்றுள்ளார், அங்கு போய் பாருங்கள் என்றார், அதனால் தான் சென்றேன் என கூறியுள்ளார்.

ஆனால், அழகேசன் எனக்கு போன் செய்யவே இல்லை என்று அமலா பால் மேனேஜர் கூற, யார் சொல்வது உண்மை என போலிஸார் இதுக்குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.