மறைந்த நடிகை ஸ்ரீதேவி பற்றிய பேச்சுகள் இப்போதும் ரசிகர்களிடம் உள்ளது. மறக்கக்கூடிய பிரபலமா அவர் என ரசிகர்களும், பிரபலங்களும் புலம்பி வருகின்றனர்.
இந்த நிலையில் கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை நடிகை ஸ்ரீதேவி குறித்து ஒரு பதிவு போட்டிருந்தார். அதில், ஸ்ரீதேவி நடித்த படங்களில் என்னை மிகவும் கவர்ந்தது சத்மா. இந்தப் படத்தை எனது குடும்பத்தினருடன் பார்த்த நினைவு இன்றும் உள்ளது.
அவர் நமக்கெல்லாம் முன்னோடி, பலரது வாழ்க்கையிலும் உந்துதலாக இருந்துள்ளார். உங்களது இழப்பால் நாங்கள் வருந்துகிறோம் என பதிவு செய்திருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் ஹிந்தியில் வெளியான சத்மா தமிழில் கடந்த 1982ம் ஆண்டு வெளியான மூன்றாம் பிறை படத்தின் ரீமேக். சத்மா 1983ம் ஆண்டில் தான் ஹிந்தியில் வெளியானது.
1972ம் ஆண்டு தமிழகத்தில் பிறந்து வளர்ந்த சுந்தர்பிச்சை தமிழில் வெளியான மூன்றாம் பிறை படத்தை பார்க்கத்தான் வாய்ப்புள்ளது. ஆனால் அவர் சத்மா படத்தை குறிப்பிட்டுள்ளாரே என ரசிகர்கள் டுவிட்டரில் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.
Her performance in Sadma was one of my favorites and have special memories of watching Sridevi with my family. She was a pioneer and an inspiration to so many of us. So very sorry for your tragic loss and may she RIP
— Sundar Pichai (@sundarpichai) March 2, 2018