நடிகை ஸ்ரீதேவியின் மரணம் அவரது ரசிகர்களாலே தாங்கிக் கொள்ள முடியவில்லை. அப்போது அவரது குடும்பத்தாருக்கு எப்படி இருக்கும் என்பதை நினைக்க முடியவில்லை.
இந்த நிலையில் ஸ்ரீதேவியின் முதல் மகள் ஜான்விக்கும் இன்று பிறந்தநாளாம். இன்று ஜான்வி கபூர் தனது பிறந்தநாளில் மறைந்த ஸ்ரீதேவிக்கு ஒரு அழகான கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.
அதில் அவர், எனது நெஞ்சில் ஒரு வெற்றிடம் நச்சரித்துக் கொண்டே இருக்கிறது. இருப்பினும் இதையெல்லாம் கடந்து வாழ வேண்டும் என அறிவேன். இந்த வெறுமையிலும் கூட, உங்கள் அளப்பரிய பாசத்தை உணர்கிறேன். வலியிலும் துயரத்திலும் இருந்து நீங்கள் என்னை பாதுகாப்பதை நான் உணர்கிறேன்.
கண்மூடும் ஒவ்வொரு கணமும், நல்லவை மட்டுமே எனது நினைவுக்கு வருகிறது. அம்மா, நீங்கள் இந்த உலகுக்கானவர் அல்ல. நீங்கள் மிகவும் நல்லவர், மிகவும் பரிசுத்தமானவர், அன்பால் நிறைந்தவர்.
அதனால் தான் என்னவோ காலம் உங்களை மிக விரைவில் அழைத்துக் கொண்டது. இருப்பினும் நீங்கள் எங்களோடு இத்தனை காலம் வாழ்ந்தது எங்கள் பாக்கியமே. எனது தோழமைகள் எப்போது நான் மகிழ்வுடன் இருப்பதை சுட்டிக்காட்டுவார்கள்.
இப்போது புரிகிறது, அதன் காரணம் யார் என. நீங்கள் எனது உயிரின் ஒருபாதி. எனது ஆகச்சிறந்த தோழி, உங்களை பெருமைப்படுத்துவதே இனிமேல் எனது நோக்கமாக இருக்கும். எனக்குள்ளும், குஷி மற்றும் அப்பாவுக்கு உள்ளும் நீங்களே குடியிருக்கின்றீர், அதை என்னால் நன்றாக உணர முடிகிறது என ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி அந்த கடிதத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.