Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஷகீலா-சில்க் ஸ்மிதா இடையே நடந்த சண்டை - படத்தில் அந்த சீன் இருக்குமா?

நடிகை ஷகீலாவின் வாழ்க்கை வரலாறு விரைவில் திரைப்படமாகவுள்ளது. அதில் பாலிவுட் நடிகை ரிச்சா சத்தா ஷகீலா வேடத்தில் நடிக்கிறார்.

16 வயதில் நடிக்க துவங்கிய ஷகீலா எந்தஒரு பெரிய படத்திலும் நடிக்காமல் எப்படி இந்தியா முழுவதும் பிரபலமான நடிகையாக உருவானார் என்பதை இந்த படத்தின் மூலம் திரையில் காட்டவுள்ளனர்.

மேலும் ஷகீலா-சில்க் ஸ்மிதா இடையே நடந்த சண்டை பற்றி இந்த படத்தில் காட்டப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

ஒரு படத்தில் இருவரும் சேர்ந்து நடித்தபோது சில்க் கோபத்தில் ஷகீலாவின் கன்னத்தில் அறைந்துவிட்டாராம். அப்போது சில்க் முன்னணி நடிகையாக இருந்தார், ஷகீலா அப்போதுதான் சினிமா துறையில் காலடி வைத்துள்ளார். அந்த சம்பவம் பற்றி ஒரு பேட்டியில் ஷகீலா பேசியுள்ளார்.

"நான் நடிப்பதற்கு புதிது என்பதால் படப்பிடிப்பு துவங்கிய மூன்று நாட்கள் வரை ஷூட்டிங் செல்வதை தவிர்த்தேன். பின்னர் தயாரிப்பாளர் சமாதானப்படுத்தி என்னை படப்பிடிப்பிற்கு அழைத்து சென்றார். ஒரு சீனில் நான் அழவேண்டும் என இயக்குனர் கூறினார், அப்போது அங்கிருந்த சில்க் 'நீ நடிப்பதற்கு புதிது என்பதால் உனக்கு அழ தெரியாது' என கூறி பளாரென கன்னத்தில் அறைந்தார். அது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. திமிர்பிடித்த சில்க் ஸ்மிதா என்னை அடித்த அந்த நாளை இன்று வரை மறக்கவில்லை" என ஷகீலா கூறியுள்ளார்.