Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாயகி ஜேக்குலின்- இப்படி ஒரு பிரச்சனையா?

பாலிவுட் சினிமாவில் முன்னணி நாயகிகளில் ஒருவர் ஜாக்குலின் பெர்னான்டஸ். இவர் Race 3 படத்திற்காக அபுதாபி சென்றிருக்கிறார்.

அங்கு அவர் ஸ்குவாஷ் என்னும் விளையாட்டை விளையாடி இருக்கிறார். அப்போது எதிர்ப்பாராத விதமாக பந்து அவரது கண்ணில் பட்டுள்ளது. இதனால் அவருடைய கண்களில் இருந்து ரத்தம் வர ஆரம்பித்துள்ளது. பதறிப்போன படக்குழு நாயகியை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரது கண்களில் இருந்து நிற்காமல் ரத்தம் வருவதால் மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை கொடுத்து வருகின்றனர்.

ஆனால் இன்னும் அவரது கண்களில் என்ன பிரச்சனை என்ற விவரங்களை மருத்துவர்கள் தெரிவிக்கவில்லையாம்.

ஜேக்குலின் பற்றி அப்பட தயாரிப்பாளர் கூறியதாவது, ஆமாம் நடிகைக்கு கண்ணில் அடிபட்டுள்ளது. அவருக்கு மிகவும் சாதாரண அடி தான் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர் என்று கூறியுள்ளார்.