Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

யாருக்கும் தெரியாமல் நடந்த சீரியல் நடிகை பிரியா திருமணம்- மாப்பிள்ளை புகைப்படம் உள்ளே

சரவணன் மீனாட்சி சீரியல், நடன நிகழ்ச்சி போன்றவற்றின் மூலம் ரசிகர்களின் பார்வைக்கு வந்தவர் பிரியா. இவர் திடீரென்று யாருக்கும் அறிவிக்காமல் சுந்தர் என்பவரை திருமணம் செய்துள்ளார்.

திடீர் திருமணம் பற்றி அவர் கூறுகையில், சுந்தர் தமிழ்நாட்டில் பிறந்து மும்பையில் வளர்ந்துள்ளார். கொஞ்ச நாள் லண்டனில் வேலை பார்த்துவிட்டு தற்போது சென்னையில் பிரபல கார் கம்பெனியில் வேலை பார்க்கிறார்.

எங்களது காதல் திருமணம் கிடையாது, பெற்றோர்கள் பார்த்து வைத்த திருமணம். என் திருமணம் பற்றி யாருக்கும் தெரிவிக்கவில்லை என்று கேட்கிறார்கள். இது போன்ற மனசுக்கு நெருக்கமான விஷயங்களை ஃபெர்சனலாக நினைக்கிறேன். அதனால் ஜெனிபர் உள்ளிட்ட நெருக்கமான நண்பர்கள் என 10 பேருக்கு மட்டும் கூறியிருந்தேன்.

திருமணத்திற்கு பிறகு வேலைக்கு இடைவேளை விடலாமா என்று நினைத்தேன், என் கணவரும் என் விருப்பம் தான் என கூறிவிட்டார். அதேபோல் சீரியலோ, நிகழ்ச்சியோ நான் நடிப்பதை நேரில் காண வேண்டும் என்று அவரது விருப்பத்தை தெரிவித்தார் என்றார்.