Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் கில்லி படத்தில் நடித்தது எனக்கு மைனஸாக அமைந்துவிட்டது- வருத்தப்படும் ஜெனிபர்

விஜய்யின் சினிமா பயணத்தில் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு படம் கில்லி. தரணி இயக்கிய இப்படத்தில் விஜய்-திரிஷா ஜோடியாக நடிக்க ஜெனிபர் என்ற குட்டி பெண்ணும் நடித்திருந்தார்.

விஜய்யின் தங்கையாக நடித்து இப்போதும் ரசிகர்கள் நினைவில் இருக்கிறார் ஜெனிபர். இவர் சமீபத்தில் இதுவரையிலான தன்னுடைய சினிமா பயணம் குறித்து பேசியிருக்கிறார். அப்போது அவர், விஜய் அவர்களுடன் கில்லி படத்தில் நடித்தது மிகப்பெரிய விஷயம்.

ஆனால் அதில் இருந்து மக்கள் வெளிவராதது தான் எனக்கு பெரிய கஷ்டமாக இருக்கிறது. ஏனெனில் யாராலும் என்னை நாயகி என்று ஏற்க முடியவில்லை. கில்லி படத்தில் குட்டி பெண்ணாக நடித்த பெண்ணா இது, இவ்வளவு பெரியவளா என்று கூறுகிறார்கள்.

எனக்கு நாயகியாக நடிக்க வேண்டும் என்பது ஆசை, ஆனால் கில்லி படத்தில் இருந்து மக்கள் வெளிவராததால் எனக்கு படம் மைனஸாக அமைந்தது என்று கூறலாம் என பேசியுள்ளார்.