Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

'காதல் அழிவதில்லை’ சார்மி வாழ்க்கையில் எடுத்த விரக்தி முடிவு! பின்னணி இதுதானா

விக்ரம் நடிப்பில் வெளியான 10 எண்றதுக்குள்ள படத்தில் கேமியோ ரோலில் நடித்தவர் சார்மி. நிறைய தெலுங்கு படத்தில் நடித்து வரும் இவர் தமிழில் காதல் அழிவதில்லை படம் மூலம் அறிமுகமானவர்.

கன்னடம், மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் அடுத்தடுத்து படங்களில் நடித்து வரும் இவர் தற்போது வாழ்க்கையில் இனி திருமணம் செய்துகொள்ள போவதில்லை என கூறியுள்ளார்.

காரணம் அவர் ஏற்கனவே ஒருவரை தீவிரமாக காதலித்து சில விசயங்கள் ஒத்துபோகாததால் இருவரும் பிரிந்ததால் வந்த வெறுப்பு தானாம். தற்போது திருமணத்தில் விருப்பமும் இல்லையாம்.

வாழ்க்கையில் ஒருவருக்காக காத்திருப்பது, வீட்டு வேலை செய்வது, சமைப்பது எல்லாம் என்னால் முடியாது என சமீபத்தில் பேட்டியில் தன் காதல் தோல்வி பற்றி கூறியுள்ளார்.

அதோடு சில நாட்களுக்கு முன்பு இவருக்கும் தெலுங்கு சினிமாவில் பிரபல இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்துக்கும் காதல், இருவரும் திருமணம் செய்ய இருக்கிறார்கள் என பல கிசுகிசுக்கள் வந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர்கள் இருவரும் இதை பற்றி எந்த கருத்தையும் கூறவில்லை.