Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ராகுல் ப்ரீத் கருத்துக்கு நடிகைகள் கடும் எதிர்ப்பு

நடிகை ராகுல் ப்ரீத் சிங் தற்போது தெலுங்கு மற்றும் தமிழில் பிஸியான நடிகை. அவர் கைவசம் பல முன்னணி ஹீரோக்களின் படங்கள் உள்ளது.

இந்நிலையில் ராகுல் சமீபத்தில் நடிகைகள் விபச்சாரிகள் என திட்டிய ஒரு டிவி தொகுப்பாளருக்கு எதிராக நடந்த நிகழ்ச்சியில் பேசினார்.

அப்போது தெலுங்கு சினிமாவில் படவாய்ப்புக்காக தன்னை யாரும் படுக்கைக்கு அழைத்ததேயில்லை, அதுபோன்ற சம்பவங்கள் நடப்பதே இல்லை என்பது போல பேசினார்.

இதற்கு பல நடிகைகள் தற்போது வெளிப்படையாகவே ராகுலின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 'உண்மையை வெளிப்படையாக சொன்னால் தனக்கு இனி வாய்ப்பு கிடைக்காது என்ற பயத்தில் ராகுல் அப்படி பேசியுள்ளார்' என மாதவி லதா தெரிவித்துள்ளார்.

மேலும் நடிகை ஸ்ரீரெட்டி இதுபற்றி பேசும்போது, "ராகுல் உண்மையை பேசியிருக்க வேண்டும். அப்படி தவறு செய்யும் பிரபலங்களின் பெயர்களை கூட வெளியிட தயார்" என கூறியுள்ளார்.