Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வெளிநாட்டில் குடியேறும் ஸ்ரேயா

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர் ஸ்ரேயா.

கடந்த சில நாட்களாக பெரிய வாய்ப்புகள் இல்லாமல் இருந்த இவர் சில வாரங்களுக்கு முன்பு தனது ரஷ்ய காதலர் ஆண்ட்ரேவ் கோஷ்சேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அப்போது தெலுங்கில் வெங்கடேஷ்க்கு ஜோடியாக படத்தில் ஒப்பந்தமானதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது கணவருடன் ரஷ்யாவில் குடியேறப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் இவர் படத்தில் இனி நடிக்கமாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.