Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கடைசியாக அஜித் படத்தை பார்த்த நடிகை சரோஜா தேவி- என்ன சொல்றாங்க பாருங்க

நடிகர் அஜித் மீண்டும் சிவாவுடன் கூட்டணி அமைத்து தன்னுடைய அடுத்த படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார். படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது, அதோடு அங்கு அஜித் ரசிகர்களுடன் எடுக்கும் புகைப்படங்களும் வெளியாகிய வண்ணம் உள்ளது.

இந்த நேரத்தில் சினிமாவில் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு வெளியாகி இருக்கிறது. அந்த படத்தை அனைவரும் புகழ படம் குறித்து சிலர் சரோஜா தேவியிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர், என்னை பற்றிய அனைத்து விஷயங்களும் மக்களுக்கு தெரியும். அதனால் படம் எடுக்க எந்த சுவாரஸ்யமும் இல்லை என்றார்.

கடைசியாக அவர் பார்த்த படம் குறித்து பேசும்போது, இப்போது வரும் படங்களை நான் பார்ப்பது இல்லை. கடைசியாக நான் பார்த்தது அஜித்-த்ரிஷா நடித்த என்னை அறிந்தால் என்று கூறியுள்ளார்.