Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தனி ஒரு பெண்ணாக இருந்து கான் நடிகர்களுக்கு வசூலில் சவால் விட்ட அலியா பட்

அலியா பட் பாலிவுட் திரையுலகை கலக்கி வரும் இளம் நடிகை. இவர் எப்போதும் தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடிப்பவர்.

இவருக்கு என்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டம் உள்ளது, இந்நிலையில் இவர் உளவாளியாக நடித்து ராஸி படம் சில வாரங்களுக்கு முன் ரிலிஸானது.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பு பெற்றுள்ளது, இரண்டு வார முடிவில் இப்படம் ரூ 110 கோடி வரை இந்தியாவில் மட்டுமே வசூல் செய்துவிட்டது.

உலகம் முழுவதும் இப்படம் ரூ 150 கோடி வசூல் செய்துள்ளது, இப்படத்தில் அலியா தவிர வேறு யாரையும் ரசிகர்களுக்கு தெரியாது.

ஒரு நடிகையாக இத்தனை கோடிகள் வசூலை அலியா பெற்றிருப்பது கான் நடிகர்களுக்கே ஆச்சரியம் தான்.