Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஷாலினி தங்கை ஷாம்லிக்கு தொடரும் சோகம்- வருத்தத்தில் நடிகை

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் நடிகர் அஜித்குமார். இவர் படங்கள் என்றாலே ரசிகர்களிடம் எப்படிபட்ட வரவேற்பு பெறும் என்பது நமக்கு தெரியும். அதோடு பாக்ஸ் ஆபிஸிலும் பட்டய கிளப்பும்.

இவரது மனைவி ஷாலினியின் தங்கை ஷாம்லியும் சினிமாவில் நாயகியாக நடித்து வருகிறார். தமிழில் வீரசிவாஜி என்ற படத்தில் அறிமுகமான இவர் தெலுங்கிலும் நாக சவுரியாவுடன் அம்மம்மாகரிலு என்ற படத்தில் நடித்தார்.

ஆனால் அவர் நாயகியாக நடித்த இரண்டு படங்களுமே சரியாக ஓடவில்லை, பாக்ஸ் ஆபிஸிலும் சரியான கலெக்ஷனை பெறவில்லை.

இதனால் கடும் வருத்தத்தில் உள்ளாராம் ஷாம்லி. அடுத்தடுத்து மிகவும் தெளிவாக கதை கேட்டு நடிக்க இருக்கிறாராம்.