Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இப்படி ஒரு விளம்பரத்தை மட்டும் போட்டுடாதீங்க: கோபமாக பேசிய நடிகை பிரியா பவானி ஷங்கர்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் கலவரத்தில் முடிந்து 13 பேர் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டனர். அதன் பிறகுதான் அரசு அந்த காப்பர் உருக்கு ஆலையை மூட அரசாணை வெளியிட்டது.

இது பற்றி கருத்து தெரிவித்துள்ள நடிகை பிரியா பவானி ஷங்கர் "அரசு தான் நடவடிக்கை எடுத்தது என தியேட்டரில் விளம்பரம் போட்டுவிடாதீர்கள்" என கூறியுள்ளார்.

"ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமா மூட அரசாணை பிறப்பிக்கப்பட்டது மகிழ்ச்சி. ஆனா இன்னும் கொஞ்ச நாள்ல சினிமா தியேட்டர் இன்டெர்வல்ல ‘மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையிலான தமிழக அரசு இந்த நடவடிக்கை எடுத்துச்சுன்னு’ விளம்பரம் மட்டும் போட்டுடாதீங்க ப்ளீஸ்.🙏🏼ஏற்கனவே ஜல்லிக்கட்டு உரிமைய மக்களுக்கு தமிழக அரசு எப்டி போராடி வென்று எடுத்துச்சுன்னு போடற குறும்படமே போதும்.🙏🏼அடிப்படை வாழ்வாதாரத்துக்கும் உரிமைக்கும் போராடிக்கிட்டு இருக்கற மக்களுக்கு கிடைச்ச சின்ன வெற்றியா இது இருந்துட்டு போட்டும்," என பிரியா பவானி ஷங்கர் தெரிவித்துள்ளார்.