Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாலிவுட்டில் சர்ச்சையான நடிகருக்கு ஜோடியாக வேதிகா- இந்த படத்தில் என்ன ஆகுமோ!

வேதிகா தமிழில் முனி படத்தின் மூலம் அறிமுகமானவர். இப்படத்தை தொடர்ந்து மலை மலை, காளை ஆகிய படங்களில் நடித்தார்.

இவருக்கு தமிழில் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும், அவ்வபோது ஒரு சில படங்களில் நடித்து வருகின்றார்.

தற்போது கூட லாரன்ஸ் இயக்கி வரும் காஞ்சனா-3 படத்தில் நடித்து வருகின்றார். தற்போது இவர் பாலிவுட்டில் கால் பதிக்கவுள்ளார்.

பாபநாசம் படத்தை இயக்கிய ஜித்து ஜோசப் இந்தியில் இயக்கவிருக்கும் கிரைம் திரில்லர் படத்தில் வேதிகா நடிக்கிறார்.

2012 ல் வெளிவந்த ‘த பாடி’ என்ற ஸ்பானிஷ் படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகிறது. இம்ரான் ஹாஸ்மி கதாநாயகனாகவும் முக்கிய வேடத்தில் ரிஷி கபூரும் நடிக்கும்

இம்ரான் ஹாஸ்மி படம் என்றாலே லிப் லாக் முத்துக்காட்சிகள் அதிகம் இருக்கும், இதிலிருந்து வேதிகா தப்புவாரா என ரசிகர்கள் தற்போதே பேசத்தொடங்கிவிட்டனர்.