Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பொது இடத்தில் விஜய் பட நடிகைக்கு நேர்ந்த சோகம்!

தமிழில் சினிமா நடிகைகளுக்கு பஞ்சமில்லை. தமிழ்நாட்டை சேர்ந்த நடிகைகள் நடிக்கிறார்களோ இல்லையோ இந்தியா முழுக்க இருக்கிற நடிகைகள் இங்கு வந்து நடித்து பிரபலமாகிவிடுகிறார்கள்.

நயன்தாரா போன்ற மற்ற மொழியை சேர்ந்த நடிகைகள் இன்னும் தமிழில் கொடிகட்டிப்பறக்கிறார்கள். அர்ஜூன் ரெட்டி படத்தின் ஹீரோ விஜய் தேவரகொண்டா தற்போது நோட்டா என்னும் படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

இவருக்கு ஜோடியாக மெஹ்ரீன் பிர்சாதா நடிக்கிறார். தெலுங்கு நடிகையான இவர் அண்மையில் பந்தனம் படத்தின் இசை வெளியீட்டிற்காக விஜயவாடா சென்றுள்ளார்.

பின் நோட்டா படப்பிடிப்புக்கு திரும்புவதற்காக விமானம் கிடைக்காததால் சென்னைக்கு ரயிலில் வந்துள்ளார். அப்போது இவரின் இருக்கையில் மது அருந்திய நபர் அமர்ந்து வந்துள்ளார்.

சங்கடமான நடிகை தன் இயக்குனர் ஆனந்த் சங்கருக்கு போன் செய்து கார் ஏற்பாடு செய்து தர கேட்டுள்ளார். அந்த காரில் இவர் வந்ததும் அவரை ரசிகர்கள் சிலர் வேறு காரில் 9 மணிநேரமாக பயணம் செய்து அவரை பாதுகாப்பாக சென்னையில் சேர்த்துள்ளனர்.

பின் விசயமறிந்த இயக்குனர் இதுபோல ரிஸ்க்குகளை இனி எடுக்க வேண்டாம் என கண்டித்துள்ளார்.