Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பேஷன் என்ற பெயரில் சோனம் கபூர் அணிந்துவந்த உடையை கலாய்த்த ரசிகர்கள்

நடிகை சோனம் கபூர் என்றால் ரசிகர்கள் மனதில் முதலில் தோன்றுவது பேஷனாக அவர் அணிந்து வரும் உடைகள் தான்.

சமீபத்தில் தான் அவரது காதலர் ஆனந்த் அஹுஜாவை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் அவர் சமீபத்தில் நடிகை கரிஷ்மா கபூரின் பிறந்தநாள் விழாவுக்கு சென்றிருந்தார்.

அப்போது அவர் அணிந்து வந்திருந்த உடை தான் தற்போது ஒரு பெரிய விவாதத்தை தூண்டிவிட்டுள்ளது. ஒரு பெரிய சட்டையை எடுத்து போட்டுகொண்டு, ஒரு கை மட்டும் பாதி தெரியும் அளவுக்கு அதை அணிந்துகொண்டார்.

சாதாரண சட்டையை இப்படி பேஷனாக மாற்றியதை பலர் பாராட்டி வருகின்றனர். ஆனாலும் சமூகவலைத்தளங்களில் அவரை கலாய்த்தும் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.