Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இளைஞர்களிடம் அதிக வரவேற்பை பெற்ற ஹிட் படத்தில் நடிக்க மறுத்த ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்

மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகள்கள் இப்போது அவர்களது வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர். அவரது முதல் மகள் ஜான்வி தடக் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார், அப்படமும் விரைவில் வெளியாக இருக்கிறது.

இப்படத்திற்கு முன் ஜான்வி கபூருக்கு அர்ஜுன் ரெட்டி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம். ஆனால் இயக்குனர் கரன் ஜோஹர் அவரை தடக் போன்ற படத்தின் மூலம் அறிமுகம் செய்ய விரும்பியதால் ஜான்வி கபூரும் அர்ஜுன் ரெட்டி வாய்ப்பை ஏற்க மறுத்துள்ளார்.

அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்த நடிகை ஷாலினி பாண்டேவுக்கு ரசிகர்கள் பெரிய வரவேற்பை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.