Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் யாசிகா ஆனந்த்திற்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி!

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர், யாசிகா ஆனந்த். பிக்பாஸ் அவருக்கு மேலும் விளம்பரத்தை தேடித்தந்துள்ளது. இதனால் தற்சமயம் சினிமா டிரண்டிங்கில் இவரும் முன்னணீயில் இருக்கிறார்.

இவரை வைத்து படம் எடுக்க ஆசைப்பட்ட டைரக்டர்கள் இவரை அணுக, வரவிருந்த நேரத்தில் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுவிட்டார். இவர் வெளியே வந்தவுடன் இவரை யார் முதலில் சந்திப்பது என்று டைரக்டர்களிடம் கடும் போட்டி இருக்கிறது. இதனால் வெளியே வந்தவுடன் யாசிகா காட்டில் அடை மழை என்பது உறுதி.

இதற்கெல்லாம் காரணம் அவர் ஆடை மற்றும் நடனம் ஆடுவதில் காட்டும் தாராளமே. இந்நிலையில் அவர் நடித்து இருக்கும் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, நோட்டா போன்ற படங்கள் திரைக்கு வர இருக்கின்றன.

இதற்கிடையே தம்பி ராமைய்யா இயக்கியுள்ள மணியார் குடும்பம் என்ற படத்தில் ஹீரோவுடன் பயங்கர குத்தாட்டம் ஆடியுள்ளாராம். இந்த படமும் திரைக்கு வர இருக்கும் நிலையில் இதன் மூலம் எவ்வளவு பிரபலமாகவுள்ளார் என்பது தெரியவில்லை.

இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது யாசிகா தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வந்தாலும் ஆச்சிரியப் படுவதற்கில்லை என கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுகின்றன.