Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நிம்மதியை இழந்த ஜானகி! எல்லை மீறும் ரசிகர்கள்

தென்னிந்தியாவின் இசைகுயில் என வர்ணிக்கப்படுபவர், எஸ்.ஜானகி. தென்னிந்திய மொழி படங்களில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ள இவருக்கு தற்போது வயது 80. தற்சமயம் ஐதராபாத்தில் வசித்து வரும் அவர், உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வருகிறார். இதனால் அவர் மருத்துவமனைக்கு சென்று வருவது வழக்கம்.

இதை பார்த்த சிலர் அவரை பற்றிய தவறான வதந்திகளை பரப்பி வந்தனர். இதனால் கவலையடைந்த ஜானகி,’ தயவுசெய்து என்னையும், என்னை சார்ந்தவர்களையும் கொல்லாதீர்கள்’ என்று வேண்டுகோள் விடுத்தார். இதையெல்லாம் மதிக்காத அந்த விஷமிகள் அவரை பற்றிய வதந்திகளை பரப்புவதையே வேலையாக செய்தனர்.

இதையெல்லாம் பார்த்து ஆத்திரமடைந்த மலையாள திரைப்பட பின்னணி பாடகர்கள் சங்கத்தினர் அந்த விஷமிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள போலீஸில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து விசாரித்து குற்றவாளிகள் எந்த மாநிலத்தில் இருந்தாலும் கைது செய்து நடவடிக்கை எடுக்கும்படி சைபர் க்ரைம் பிரிவுக்கு கேரள போலீஸ் டி.ஜி.பி.லோக்நாத் பெஹ்ரா உத்தரவிட்டுள்ளார். இதனை அவரது ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.