Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜெயலலிதாவாக மாறத்துடிக்கும் நடிகைகள்

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல அரசியிலிலும் அசைக்கமுடியாத இடத்தை பிடித்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா.

நடிகையாக அறிமுகமான இவர் எம்.ஜி.ஆர் மூலம் அரசியலில் காலடி எடுத்து வைத்து பலமுறை முதல்வராக இருந்துள்ளார். பல சர்ச்சைகளும், சாதனைகளும் நிறைந்த இவரது வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க விருப்பம் என நடிகை மஞ்சிமா மோகன் சமீபத்திய பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு மலையாள நடிகை ரீமா கல்லீங்கலும் தானும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க விரும்புவதாக கூறியிருந்தார்.

சமீபத்தில் வந்த ஹிட்டான நடிகையர் திலகம் படத்தின் வெற்றி தான் பலருக்கும் இந்த ஆசையை விதைத்துள்ளது.

கடந்த வாரம் வெளியான சஞ்சய்தத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட சஞ்சு படமும் பெரிய வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது..