Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நீண்ட நாள் கழித்து திரைக்கு வரும் நஸ்ரியா- ரீலிஸ் தேதி வெளியானது

மலையாள பட உலகில் அறிமுகமான நஸ்ரியா பிறகு படிப்படியாக அனைத்து மொழி ரசிகர்களுக்கும் பிடித்தமான நடிகையாக மாறிவிட்டார். இதற்கெல்லாம் காரணம் அவரின் குழந்தைதனமான நடிப்பு தான்.

ஆனால் இது எல்லாம் ரொம்ப நாள் நீடிக்கவில்லை. 2014ல் முன்னணி மலையாள நடிகரான பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம், பெங்களூர் டேஸ்.

அவ்வளவுதான் நடிப்பிற்கு முழுக்கு போட்டுவிட்டார் என்று எண்ணியிருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இயக்குனர் அஞ்சலி மேனன் இயக்கத்தில் கூடே என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

இப்படத்தில் ஹீரோவாக ப்ரித்விராஜும் இன்னொரு நாயகியாக பார்வதியும் நடிக்கின்றனர். இதுவரை வெளியாகியுள்ள படத்தின் 3 பாடல்களுமே நல்ல வரவேற்பு பெற்றிருக்கும் நிலையில் படத்தை இம்மாதம் 14ம் தேதி திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.