Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ் சினிமா இயக்குனரும் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார், அவர்- ஸ்ரீரெட்டி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

தெலுங்கு சினிமாவில் தனக்கு பிரபலங்களால் பிரச்சனை ஏற்படுகிறது என்று கூறி அரை நிர்வாண போராட்டம் செய்தவர் நடிகை ஸ்ரீரெட்டி.

இவர் தொடர்ந்து தனக்கு தொல்லை கொடுத்த பிரபலங்கள் குறித்தும், ஆதாரமும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துகிறார். அதில் முக்கியமாக ராணாவின் தம்பி சிக்கியிருந்தார். ஸ்ரீரெட்டியுடன், ராணா தம்பி நெருக்கமாக எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

இப்போது என்னவென்றால் தமிழ் சினிமாவிலும் ஒரு இயக்குனர் தன்னிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளார் என்றும் விரைவில் அவரது பெயரை வெளியிடுவேன் என்கிறார்.

தமிழில் கண்டிப்பாக ஒரு படம் நடிப்பேன் என்றும் கூறி வருகிறார் நடிகை ஸ்ரீரெட்டி. தெலுங்கை தொடர்ந்து தமிழில் ஸ்ரீரெட்டியிடம் யார் யார் சிக்கினார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.