Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விக்ரம்வேதா பட புகழ் ஸ்ரத்தா ஸ்ரீநாத் கலக்க இருக்கும் அடுத்த படம்- இவருடனா

விக்ரம் வேதா படத்தில் மாதவனின் மனைவியாக நடித்திருந்தவர் ஸ்ரத்தா ஸ்ரீநாத். மாதவனால் சிறையில் அடைக்கப்படும் விஜய்சேதுபதியை ஜாமீனில் எடுக்கும் காட்சிகளிலும் விஸ்கியை ஸ்டைலாக குடிக்கும் காட்சிகளிலும் தனது பிரம்மிப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

இந்த படத்திற்கு அடுத்ததாக அவர் நிவின்பாலியுடன் நடித்திருந்த ரிச்சி படம் எதிர்பார்த்த வெற்றி பெறாததால் தனது சொந்த ஊரான கர்நாடகாவுக்கே சென்றுவிட்டார். அதன்பின் சில மாதங்கள் கழித்துதான் மீண்டும் மாதவனுடன் மாரா என்ற படத்தில் கமிட்டானார்.

தற்போது இந்த படத்தில் நடித்து கொண்டிருக்கும் ஸ்ரத்தா, அடுத்ததாக தற்சமயம் இரவுக்கு ஆயிரம் கண்கள் என்ற வெற்றி படத்தில் நடித்திருந்த அருள்நிதியின் ஜோடியாக ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். எஸ்.பி.சினிமாஸ் தயாரிக்கும் இந்த படத்தை பரத் நீலக்கண்டன் இயக்குகிறார்.