Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எனக்கு பிடித்த பிரபலங்கள் அஜித், அட்லி... ஸ்ரீரெட்டியின் புதிய லிஸ்ட்

நடிகை ஸ்ரீரெட்டி தமிழ், தெலுங்கு திரையுலகில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். நானி, பவன்கல்யாண் என முன்னணி தெலுங்கு நடிகர்களிலிருந்து முருதாஸ், லாரன்ஸ், சுந்தர்.சி என முன்னணி தமிழ் இயக்குனர்கள் வரை பலர் தன்னை ஏமாற்றியதாக கூறியுள்ளார்.

சென்னை வந்துள்ள இவர் தற்போது இங்குள்ள ஊடகங்களில் பேட்டியளித்துவருகிறார்.

இதில் தெலுங்கு தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவின் மகன் என்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டு ஏமாற்றிய பின்னர்தான் இதை வெளியில் சொல்ல முடிவெடுத்தேன்.

புகழுக்காக இதை செய்வதாக சொல்வது உண்மையில்லை, ஒருவார புகழுக்காக வாழ்க்கையை பணயம் வைக்கமாட்டேன் என்று கூறினார்.

மேலும் தமிழ்சினிமாவில் தனக்கு பிடித்த நடிகர் அஜித் என்று கூறிய ஸ்ரீரெட்டி இயக்குநர்களில் கார்த்திக் சுப்புராஜ், வசந்த பாலன், அட்லி, எங்கேயும் எப்போதும் பட இயக்குநர் சரவணன் ஆகியோரை குறிப்பிட்டார்.