Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பச்சிளம் குழந்தையை கொடுமைப்படுத்திய நடிகை- ஆத்திரமடைந்த ரசிகர்கள்

பிரபல நடிகை ஒருவர் தனது 5 மாதமேயான பெண் குழந்தைக்கு காது குத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அமெரிக்காவில் தொலைக்காட்சி தொடர்களிலும் மாடலிங்கிலும் கலக்கி வருபவர் கைலி ஜென்னர்.

இவர் தனது ஸ்டார்மி என்ற 5 மாத பெண் குழந்தைக்கு காது குத்தி அந்த போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த அவரது ரசிகர்கள் 5 மாத குழந்தைக்கு இப்படி செய்யலாமா என கடிந்து கொண்டு வருகின்றனர்.

ஆனால் ஒரு சிலரோ நைஜீரியாவில் பிறந்த இரண்டாம் நாளே குழந்தைகளுக்கு காது குத்துகிறார்கள் என கைலிக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.