தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நடிகை இடத்திற்கு வர முயற்சிப்பவர் அஞ்சலி. ஒரு நல்ல படத்தில் நடித்தால் அடுத்து 4 மோசமான படத்தில் நடித்துவிடுகிறார். மலையாள முன்னணி நடிகர் மம்முட்டியுடன் இவர் நடித்திருக்கும் பேரன்பு விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் இவர் லிசா 3டி என்ற ஹாரர் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். பி.ஜி.முத்தையா தயாரிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் ராஜு விஸ்வநாத் இயக்குகிறார்.
இந்த படத்தின் சண்டைக்காட்சி நேற்று படமாக்கப்பட்டது. படம் 3டி என்பதால் அஞ்சலி ஒரு தோசைக்கல்லை தூக்கி கேமரா முன் வீச வேண்டும். ஆனால் டைரக்டர் ஆக்ஸன் சொன்னதும் நேராக டைரக்டர் மீதே வீசி விட்டார், அஞ்சலி. இதனால் ரத்தம் கொட்ட படப்பிடிப்பு தளமே சிறிது நேரத்தில் களேபரமானது.