90களில் முன்னணி கவர்ச்சி நடிகையாக இருந்தவர் ஷகீலா. அவர் தற்போது சினிமாவில் அதிகம் நடிப்பதில்லை என்றாலும் அவருக்கு அதிகம் ரசிகர்கள் உள்ளனர்.
அவரின் வாழ்க்கை வரலாறை தற்போது திரைப்படமாக எடுக்கவுள்ளனர். அதில் பாலிவுட் நடிகை ரிச்சா சத்தா ஷகீலாவாக நடிக்கவுள்ளார்.
படத்தின் ஷூட்டிங் துவங்கும்முன் அவர் பெங்களூரில் ஷகீலாவை நேரில் சந்தித்து பேசியுள்ளார். அந்த சந்திப்பு பற்றி பேட்டியளித்துள்ள அவர் "ஷகீலா படத்தில் மட்டும் தான் அப்படி நடிக்கிறார். நிஜ வாழ்க்கையில் அதிகம் கூச்ச சுபாவம் கொண்டவர்" என கூறியுள்ளார்.
மேலும் "அது என் வேலை. அதனால் தான் நடிக்கிறேன். எனக்கு கூச்ச சுபாவம் அதிகம். துப்பட்டா இல்லாமல் வெளியில் செல்லமாட்டேன். ஆனால் கேமரா முன்பு வெட்கத்தை விட்டு நடிப்பேன். ஷூட் முடிந்தபிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு வந்துவிடுவேன்" என ஷகீலா பேட்டியில் கூறியுள்ளார்.