Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..

நடிகை ஸ்ரீரெட்டி வரிசையாக பல்வேறு தமிழ் சினிமா பிரபலங்கள் மீது பாலியல் புகார் தெரிவித்து வருகிறார். பல மீடியாக்களுக்கு அவர் அளித்து வரும் பேட்டிகளும் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில் தற்போது இந்த சர்ச்சை பற்றி பேசியுள்ள காஜல் அகர்வால் "நான் இதுபோல எதையும் எதிர்கொள்ளவில்லை. சினிமா துறையில் வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது இருக்கிறதா, இல்லையா என்பது எனக்கு தெரியாது" என கூறியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு நடிக்க ராகுல் ப்ரீத் சிங் இதேபோல ஒரு கருத்தை கூறியபோது நடிகை ஸ்ரீரெட்டி கோபமாக பதிலடி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனால் காஜல் அகர்வால் கருத்துக்கும் அவர் பதில் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.